அமைப்பின் நோக்கங்கள்

இது ஒரு அரசியல் கட்சி சார்பற்ற பொது நல அமைப்பாகும். இந்த அமைப்பின் அடிப்படை நோக்கங்களையும் இலட்சியங்களையும் ஏற்றுக்கொள்பவர்கள் இவ்வமைப்பில் உறுப்பினராகப் பதிவு செய்து கொள்ளலாம்.

1. மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நாட்டுப்பற்று மொழிப்பற்று மற்றும் சமூக உணர்வு ஏற்படப் பாடுபடுதல்.

2. இளைஞர்களைத் தன்னம்பிக்கைமிக்கவர்களாகவும், இடைவிடாது உழைத்து முன்னேறி அவரவர் துறையில் மிகச்சிறந்து விளங்கக் கூடியவர்களாகவும், தன்னலமற்ற தியாக உள்ளமும், சேவையுணர்வும் கொண்டவர்களாகவும் உருவாக்கப் பாடுபடுதல்.

3. நம் நாட்டின் பாரம்பாரியம் , பண்பாடு கலாச்சாரம், கலை இலக்கியம், வரலாறு முதலியவற்றை இளைய தலைமுறை முழுமையாக அறிந்து கொள்ளப் பாடுபடுதல்.

4. கடந்த கால இந்தியாவைப் படிப்போம், எதிர்கால இந்தியாவைப் படைப்போம் என்ற கோணத்தில் வரலாற்றை மக்களிடம் கொண்டு செல்வதோடு, இன்றைய தேசபக்தி எது என்பதை அவர்களுக்கு தெளிவுபடுத்தப் பாடுபடுதல்.

5. மக்கள் மத்தியில் விழிப்புணர்வைக் கொண்டுவந்து நாட்டில் தலைவிரித்தாடும் லஞ்சம், ஊழல், கலப்படம், மோசடி முதலிய சமூகவிரோதச் செயல்களைத் தடுத்து நிறுத்தப் பாடுபடுதல்.